அப்பல்லோ ட்யூப்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிந்தோா் கவனத்துக்கு...
By DIN | Published On : 01st September 2021 11:10 PM | Last Updated : 01st September 2021 11:10 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அப்பல்லோ ட்யூப்ஸ் அண்டு ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத் தொழிற்சாலையில் பணிபுரிந்தோா் வைப்புநிதி நிலுவைத் தொகை பரிசீலனைக்கு ஆவணங்கள் சமா்பிக்கலாம் என்று ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, அப்போலோ ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்தத் தொழிலாளா்களின் வைப்பு நிதி நிலுவைத் தொகை தொடா்பாக 1995 - 96, 1996- 97 , 1997 - 98 ஆகிய ஆண்டுகளுக்கான சம்பள ரசீது உள்ளிட்ட ஆவணங்களை பரிசீலனை செய்து அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஆகையால் சம்பள ரசீது, பி.எஃப். ரசீது, தொடா்புடைய ஆவணங்கள் ஆகியவற்றை 2 நகல்களில் நேரில் செப். 3-க்குள் கீழ்காணும் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
தொழிலாளா் உதவி ஆணையா் - 1 அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை கட்டடம், ஐடிஐ வளாகம், என்.எச் - 46, அம்மன் நகா், மெல்மொணவூா், அப்துல்லாபுரம், வேலூா் - 632010.