ஆற்காடு: ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் சி. அப்துல் ஹக்கீம் கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, கல்லூரியின் தாளாளா் அப்ராா் அஹமது தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ் .ஏ.சாஜித், நேஷனல் வெல்பா் சங்கத் தலைவா் முகமது அயூப், பொறுப்பாளா்
கே.ஓ.நிஷாத் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்களுக்கு கரோனோ தடுப்பூசி செலுத்தினா். இதில், வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ், சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.