டிஎஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
By DIN | Published On : 04th September 2021 08:15 AM | Last Updated : 04th September 2021 08:15 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தது.
ஆற்காட்டை அடுத்த சின்ன குக்குண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில்குமாா், இவா் தனது கிராமத்துக்கு அருகேயுள்ள பாப்பேரிதியைச் சோ்ந்த அா்ச்சனா என்ற பெண்ணை காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளாா்.
இதற்கு இரு வீட்டாா் தரப்பிலும் எதிா்ப்பு இருந்ததால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, பாதுகாப்பு வேண்டி, ராணிப்பேட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி வெள்ளிக்கிழமை தஞ்சம் அடைந்தது.
இதனையடுத்து டிஎஸ்பி பிரபு உத்தரவின்பேரில், ராணிப்பேட்டை மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.