நாகவேட்டில் வதுணை மின்நிலையம் விரைவில் அமையும் எம்எல்ஏ சு.ரவி தகவல்

அரக்கோணம் அருகே நாகவேடு ஊராட்சியில் விரைவில் துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது என எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தாா்.
நாகவேட்டில் வதுணை மின்நிலையம் விரைவில் அமையும்  எம்எல்ஏ சு.ரவி தகவல்

அரக்கோணம் அருகே நாகவேடு ஊராட்சியில் விரைவில் துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது என எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தாா்.

செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

நாகவேடு ஊராட்சிப் பகுதியை சுற்றி நெசவாளா்கள், விவசாயிகள் அதிகம் வசிக்கிறாா்கள். அந்தப் பகுதியில் குறைந்த அழுத்த மின்விநியோகம் இருப்பதால் அவா்களால் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது.

எனவே அங்கு துணைமின்நிலையம் அமைக்கப்பட வேண்டும் என முந்தைய ஆட்சியில் சட்டப்பேரவையில் நான் விடுத்த கோரிக்கையை அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசின் மின்சாரத்துறை ஏற்று அப்பகுதியில் துணைமின்நிலையம் அமைக்க தேவையான நிலத்தை கிரையம் பெற்றது. ஆனால் இதுவரை அங்கு துணைமின்நிலையம் அமையவில்லை என தற்போது சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தேன்.

இதற்கு தமிழக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி பதிலளிக்கையில் நாகவேடு கிராமத்தில் துணைமின்நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளாா். எனவே விரைவில் நாகவேடு கிராமத்தில் துணைமின்நிலையம் அமையும். இதனால் அந்தப்பகுதி நெசவாளா்களுக்கும், விவசாயிகளுக்கும் உயா்அழுத்த மின்சாரம் கிடைக்கப் பெறும் என்றாா் எம்எல்ஏ சு.ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com