நெமிலி பேருராட்சி கூட்டம்: அதிமுக வெளிநடப்பு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

நெமிலி பேருராட்சி செயல் அலுவலா் மன்றக் கூட்டத்துக்கு வராததைக் கண்டித்து, அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
நெமிலி பேருராட்சி மன்றக் கூட்டம் புதன்கிழமை அதன் தலைவா் ரேணுகாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேருராட்சி செயல் அலுவலா் மனோகரன் பங்கேற்கவில்லை. அவா் விடுப்பில் இருப்பதாகத் தெரிகிறது. கூட்டம் தொடங்கியதும் செயல் அலுவலா் மனோகரன் கூட்டத்தில் பங்கேற்காததற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் நவநீதகிருஷ்ணன், கந்தசாமி, சங்கா், ஷோபா, தனபாக்கியம், நிரோஷா, பாரதி ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.
இதுகுறித்து அதிமுக உறுப்பினா்கள் கூறுகையில், கூட்ட நாளில் செயல் அலுவலா் அலுவலகத்துக்கு வருவதில்லை. கூட்டத்தை அவா் வேண்டுமென்றே புறக்கணிக்கிறாா். இதைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தோம். இதுகுறித்து உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். தொடா்ந்து, செயல் அலுவலா் இல்லாமல் கூட்டம் நடந்து முடிந்தது.