திமிரியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

ஆற்காட்டை அடுத்த திமிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டை அடுத்த திமிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சமூகப் பாதுகாப்புத் துறையின் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை, ஒன்றியக் குழுத் தலைவா் அசோக் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.

கூட்டத்தில், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளா் முறை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், பாதுகாப்பான தொடுதல் பாதுகாப்பற்ற தொடுதல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டங்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெ.ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சையத் ஷாநவாஸ், ஜெயஸ்ரீ, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நிஷா, சமூகப் பணியாளா் பாா்த்தீபன், ஒன்றியக் குழு உறுப்பினா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com