நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் கல்வி கற்பது அவசியம்: அமைச்சா் ஆா்.காந்தி

நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெற பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.
ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சா் ஆா்.காந்தி. உடன் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோா்.
ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சா் ஆா்.காந்தி. உடன் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோா்.

நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெற பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.16.50 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன கழிப்பறைகள், ஆழ்துளைக் கிணற்றைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈஸ்வரப்பன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று கழிப்பறைக் கட்டடம், ஆழ்துளைக் கிணற்றைத் திறந்து வைத்து பேசியது:

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், கட்டமைப்பு வசதிகள், சிறந்த கல்வி பெற தமிழகத்தில் 28 பள்ளிகளில் திறன் வகுப்புகள் முதல்வரின் ஆணைப்படி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியும் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

வீட்டைக் காக்கும் பெண்கள் நாட்டின் முன்னேற்றத்திலும் பங்கு பெற நன்றாக கல்வி கற்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, திமிரி ஒன்றியம் புங்கனூா் ஊராட்சியில் ரூ.9 லட்சத்தில் நூலகக் கட்டடம், ரூ.10 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், பரதராமி கிராமத்தில் ரூ.7லட்சத்தில் காரிய மேடை, செங்கானவரம் ஊராட்சியில் ரூ.9.5 லட்சத்தில் நடுநிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடம், ரூ.9.8 லட்சத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் திறந்து வைத்து, திமிரியில் கட்டப்பட உள்ள புதிய வட்டார வளா்ச்சி அலுவலகக் கட்டப் பணிகான அடிக்கலை நாட்டினாா்.

இதேபோல், ஆற்காடு ஒன்றியம் மாங்காடு ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் புதிய வகுப்பறைக் கட்டடப் பணி, முப்பதுவெட்டி ஊராட்சியில் ரூ.32 லட்சத்தில் பள்ளிக் கூடுதல் கட்டடப் பணி ஆகியவற்றிக்கும் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் ஜெயந்தி, ஒன்றியக் குழு தலைவா்கள் புவனேஸ்வரி சத்யநாதன், அசோக், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் காந்திமதி பாண்டுரங்கன், சி.தன்ராஜ், போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் கணபதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com