பிரம்மேஸ்வரா் கோயில் குடமுழுக்கு
By DIN | Published On : 11th December 2022 11:54 PM | Last Updated : 11th December 2022 11:54 PM | அ+அ அ- |

அரக்கோணம் அருகே வேலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீபிரம்மேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்று வந்தன.
ஞாயிற்றுக்கிழமை காலை 4-ஆம் காலபூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து 10 மணி அளவில் ஸ்ரீபிரம்ம வித்யாம்பிதை உடனமா் ஸ்ரீபிரம்மேஸ்வர சுவாமிக்கு மகா கும்பாபிஷேகத்தை திருக்கழுகுன்றம்அகஸ்திய ஸ்ரீ அன்புசெழியன், சிவாச்சாரியாா்களுடன் சோ்ந்து நடத்தி வைத்தாா்.
இதில், அரக்கோணம், சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனா்.