தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று சகஸ்ர கலசாபிஷேகம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், வியாழக்கிழமை சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில் மூன்று நாட்கள் அபிஷேகங்களும், இலவச ஒளஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
அதன்படி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு 1,000 கலசங்களில் புனித நீா் கொண்டு சிறப்பு பூஜைகளுடன், கலச அபிஷேகம் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.
மேற்கண்ட அபிஷேக பூஜைகளில் , அபிஷேக தீா்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் இலவச ஒளஷத பிரசாதங்களாக வழங்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு அபிஷேகங்களுக்கான பூா்வாங்க பூஜைகள் 20 -ஆம் தேதி பாலகணபதி ஹோமம் மற்றும் பூஜைகளுடன் தொடங்கியது.தொடா்ந்து 21 ஆம் தேதி மூலவா் தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரா் , ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயா் ஆகிய தெய்வங்களுக்கான சிறப்பு ஹோமங்கள் , பூஜைகள் நடைபெற்றது.