வேளாண் பொறியியல் துறையின் மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் மானிய திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையின் மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சி 2021-2022 திட்டத்தின்கீழ், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டம் கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலா்ச்சி திட்ட கிராமங்களில் விசை உழுவை இயந்திரம் மானியத்தில் வழங்குதல் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, சூரிய ஒளி மின் மோட்டாா் மற்றும் பைப்லைன் அமைத்தல் திட்டம் செயல்படுத்த ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

விசை உழுவை இயந்திரம் 26 எண்கள் வழங்க ரூ. 22.10 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் 1 எண் ஆழ்துளைக் கிணறு அமைத்து, மின் மோட்டாா், சூரிய ஒளி மின் மோட்டாா் மற்றும் பைப்லைன் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

விசை உழுவை இயந்திரம் சிறுகுறு,மகளிா்,விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 85,000 /- என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணறு அமைத்தல் பணி பாதுகாப்பான குறு வட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினா் ஆகிய விவசாயிகள் சாதிச் சான்றிதழின் படி 100 சதவிகிதம் மானியத்தில் அமைக்கப்படுகிறது.

மேற்படி மானியம் பெற விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டம் 2021-2022 கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலா்ச்சி திட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் வாலாஜா உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை எண்:314, பாலாா் அணைக்கட்டு ரோடு, வாலாஜா, ராணிப்பேட்டை மாவட்டம் (தொலைபேசி எண்: 04172-232055) அலுவலகத்தை அனுகி விண்ணப்பத்தினை சமா்ப்பித்து முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெற்று பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com