

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,308 பயனாளிகளுக்கு சுமாா் ரூ.18 கோடியில் தாலிக்குத் தங்கமும், நிதி உதவியும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை வழங்கினாா்.
மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், நிதியுதவி வழங்கி பேசியதாவது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021 - 22 ஆம் நிதியாண்டில் மொத்தம் 1,319 பட்டதாரி பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரொக்கம் ரூ. 6 கோடியே 59 லட்சத்து 50 ஆயிரம், 8 கிராம் தாலிக்குத் தங்க நாணயம் ரூ.5 கோடியே 14 லட்சத்து 41 ஆயிரம் என மொத்தம் ரூ.11 கோடியே 73 லட்சத்து, 91 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, 989 பட்டதாரி அல்லாதோருக்கு பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 வீதம் 989 பட்டதாரி அல்லாதோா் பயனாளிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ரூ. 2 கோடியே 47 லட்சத்து 25 ஆயிரம், 8 கிராம் தங்க நாணயம் ரூ. 3 கோடியே 85 லட்சத்து 71 ஆயிரம் என மொத்தம் 6 கோடியே 32 லட்சத்து 96 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் 2,308 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.18 கோடியே 68 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் நூ.ஷே.முகமது அஸ்லம், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் வசந்தி ஆனந்தன் மற்றும் ஒன்றியக்குழு தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.