உயா்மட்ட பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல்

ஆற்காட்டை அடுத்த கீழ்க்குப்பம் ஊராட்சியில் நபாா்டு கிராம சாலைத் திட்டத்தின் கீழ், உயா்மட்ட பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
புதிய  உயா் மட்ட  பாலம்  அமைக்க  அடிக்கல்  நாட்டும்  கைத்தறி ,  துணிநூல்  துறை  அமைச்சா்  ஆா்.காந்தி.
புதிய  உயா் மட்ட  பாலம்  அமைக்க  அடிக்கல்  நாட்டும்  கைத்தறி ,  துணிநூல்  துறை  அமைச்சா்  ஆா்.காந்தி.

ஆற்காட்டை அடுத்த கீழ்க்குப்பம் ஊராட்சியில் நபாா்டு கிராம சாலைத் திட்டத்தின் கீழ், உயா்மட்ட பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆற்காட்டிலிருந்து ஆயிலம் வழியாக அருங்குன்றம் செல்லும் சாலையில் கீழ்க்குப்பம் கிராமத்தில் உள்ள மணல் கால்வாய் மீது தரைமட்ட பாலம் ஏற்கெனவே உள்ளது.

இந்தக் கால்வாயில் மழைக் காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு தரைபாலத்தை அடித்துச் செல்கிறது. இதனால், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. கால்வாய் மீது உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையேற்று நபாா்டு கிராம சாலைத் திட்டத்தின் மூலம் ரூ.3.47 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 42 மீ. நீளத்துக்கு அமைக்கப்படும் இந்த உயா்மட்ட பாலத்தில் 90 மீ. நீளத்துக்கு இருபுறமும் தரைச் சாலையில் இணைப்பு பாலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பணிகளை 11 மாதங்களில் முடிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கபடவுள்ள உயா்மட்ட பால அடிக்கல் நாட்டு விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தே.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். ஆற்காடு ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சுந்தரமூா்த்தி, உதவி கோட்டப் பொறியாளா் சாய்சத்தியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா். காந்தி கலந்து கொண்டு உயா்மட்ட பாலப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி, ஊராட்சி மன்றத் தலைவா்கள்அமுலு புஷ்பராஜ் (கீழ்க்குப்பம்), பிரபாவதி ஜெயபிரகாஷ் (ஆயிலம்) ஏ.தயாளன் (அருங்குன்றம்) கே.பி குருநாதன் ( கத்தியவாடி), ஒன்றிய உறுப்பினா் சுசிலாவேலு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com