ஆற்காட்டை அடுத்த கலவை அருகே உள்ள மேல்புதுப்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களின் பயன்பாட்டுக்கு கணினி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியை கல்பனா தலைமை வகித்தாா். திமிரி வட்டாரக் கல்வி அலுவலா்கள் முருகன், குமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தன்னாா்வலா் கோபாலகிருஷ்ணன், பிந்து தம்பதியினா் மாணவா்களின் பயன்பாட்டுக்காக ரூ. 37,000 மதிப்புள்ள கணினியை வழங்கினாா். இதில் ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்தன், கல்விக் குழு தலைவா் சுதா, நம்மாழ்வாா் பசுமை இயக்க ஒருங்கிணைப்பாளா் நடராஜன், பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.