7 அஞ்சலகங்களில் ஆதாா் திருத்த சிறப்பு முகாம்
By DIN | Published On : 17th March 2022 11:17 PM | Last Updated : 17th March 2022 11:17 PM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: வரும் 28-ஆம் தேதி வரை ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, அரக்கோணம், கலவை, நெமிலி, பனப்பாக்கம் ஆகிய அஞ்சல் அலுவலகங்களில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் பெயா் முகவரி திருத்தம், கைப்பேசியில் இணைத்தல், செல்லிடப்பேசி எண் திருத்தம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தத் தகவலை அரக்கோணம் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளா் சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.