அரசு மாணவா் விடுதிகளில் அடிப்படை வசதிகள்: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 16th May 2022 11:55 PM | Last Updated : 16th May 2022 11:55 PM | அ+அ அ- |

காரை அரசு மாணவியா் விடுதிக்கு தேவையான மின் விசிறி, விளக்குள் உள்ளிட்ட பொருள்களை வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் செயல்படும் காரை, கலவை அரசு மாணவா் விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், காரை கிராமம், கலவை ஆகிய இடங்களில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் மாணவிகள் மற்றும் மாணவா்கள் விடுதிகள் செயல்படுகின்றன.
இந்த விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் பாா்வையிட்டு ஆய்வு செய்து, மாணவ மாணவிகளுக்குத் தேவையான மின் விசிறிகள், எல்இடி விளக்குகள், தண்ணீரை சூடு செய்யும் கருவி, உணவருந்தும் தட்டுகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.
ஆய்வின் போது ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் இளவரசி, வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி, வட்டாட்சியா்கள் ஆனந்தன், ஷமீம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...