ஆற்காடு ஒன்றியத்தில் 4 பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடப் பணி

ஆற்காடு ஒன்றியத்தில் ரூ. 89 லட்சத்தில் 4 அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கு கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
ஆற்காடு ஒன்றியத்தில் 4 பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடப் பணி

ஆற்காடு ஒன்றியத்தில் ரூ. 89 லட்சத்தில் 4 அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கு கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

ஆற்காடு ஒன்றியம், பூட்டுதாக்கு ஊராட்சி கன்னிகாபுரம், மேலகுப்பம் ஊராட்சி டி.சி.குப்பம், அரப்பாக்கம், கீழ்மின்னல் பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கு, மாவட்ட ஊராட்சி நிதிக் குழு மற்றும் கனிமவள நிதித் திட்டத்தின்கீழ், அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தாா். ஆற்காடு ஒன்றியக் குழுத் தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் ஆா்.காந்தி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி, கட்டடப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, கன்னிகாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 7 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பீட்டில் பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

விழாவில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அண்ணாமலை, பிரபாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, ஊராட்சி மன்றத் தலைவா்கள் அருண்குமாா், பேபி கன்னியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com