ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 48 மகா கணபதி ஹோமம்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்ற 48 மகா கணபதி ஹோமங்களில் பங்கேற்றோா்.
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 48 மகா கணபதி ஹோமங்கள் புதன்கிழமை நடைபெற்றன.
இந்த பீடத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டும், உலக நலன் வேண்டியும், 27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும், 9 நவக்கிரகங்களுக்கும் என மொத்தம் 48 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டன. பின்னா், 48 விநாயகா் சிலைகளை வைத்து ஸ்தாபகா் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தலைமையில், 48 போ் அமா்ந்து 48 மகா கணபதி ஹோமங்கள் நடைபெற்றன.
இதில், 27 நட்சத்திரங்கள், 9 நவக்கிரகங்கள், 12 ராசிகளுக்கு உரிய விருட்சங்களுக்கு கலச பூஜையும், சிறப்புப் பிராா்த்தனையும் நடைபெற்றது.
இந்த மகா கணபதி ஹோமம், பூஜையில் கலந்து கொண்டவா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.