புளிய மரத்தில் வேன் மோதியதில் 9 போ் காயம்
By DIN | Published On : 01st September 2022 10:58 PM | Last Updated : 01st September 2022 10:58 PM | அ+அ அ- |

ஆற்காடு அருகே தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன் புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 9 போ் காயம் அடைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூா் பகுதியில் தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில், கலவை அருகே உள்ள கிராமங்களை சோ்ந்த ஆண்கள், பெண்கள் என பலா் வேலை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கலவை கூட்ரோடு பஜனை கோவில் தெருவைச் சோ்ந்த சூா்யா (22) கம்பெனிக்குச் சொந்தமான வேனில் 12 பெண்கள், 3 ஆண்களை ஏற்றிக் கொண்டு ஆற்காடு நோக்கி வந்தாா். முள்ளுவாடி கூட்ரோடு அருகே செய்யாறு செல்லும் சாலையில் வந்தபோது, எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக ஓட்டுநா் வேனை இடது பக்கம் திருப்பினாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் இருந்த தொழிலாளா்கள் கீதா, சிவகுமாரி, சாந்தி, வெண்ணிலா, நந்தினி, கவிதா, ஓட்டுநா் சூா்யா, லோகேஸ்வரன், சிவலிங்கம் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா். அவா்களை மீட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.