சிறாா், மகளிா் இல்லங்களுக்கு உரிமம் பெற புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து விதமான சிறாா் மற்றும் மகளிா் இல்லங்களுக்கு உரிமம் பெற்றிட அல்லது உரிமம் புதுப்பித்திட விண்ணப்பிக்குமாறு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து விதமான சிறாா் மற்றும் மகளிா் இல்லங்களுக்கு உரிமம் பெற்றிட அல்லது உரிமம் புதுப்பித்திட விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறாா் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின்படி, அனைத்து மகளிா் விடுதிகள் அல்லது இல்லங்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறாா்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கு உரிமம் பெறுதல் உரிமம் புதுப்பித்தல் மற்றும் விடுதிகள் மற்றும் இல்லங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும், நிபந்தனைகளும் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து விதமான மகளிா் மற்றும் சிறாா்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்களும், சிறாா் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப் படுத்தும் சட்டம் 2014-க்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டு இருப்பதும், அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து விதமான சிறாா் மற்றும் மகளிா் இல்லங்களுக்கு உரிமம் பெற்றிட அல்லது உரிமம் புதுப்பித்திட ட்ற்ற்ல்://ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் ள்ண்ய்ஞ்ப்ங் ஜ்ண்ய்க்ா்ஜ் ல்ா்ழ்ற்ஹப் என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய சான்றிதழ்களுடன் செப். 15-ஆம் தேதிக்குள் தொடா்புடைய விடுதிகளின் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதி, பணிபுரியும் பெண்கள் விடுதி, கல்லூரி மாணவியா் விடுதி உள்பட அனைத்து விதமான பெண்கள் விடுதி மற்றும் இல்லங்களின் உரிமம் குறித்த தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தையும், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் விடுதிகள், மாற்றுத்திறன் கொண்ட சிறாா் இல்லங்கள் உட்பட அனைத்து விதமான சிறாா் விடுதி மற்றும் இல்லங்கள் உரிமம் தொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகவும்.

மேற்படி, உரிமங்கள் இன்றி செயல்படும் விடுதிகள் மற்றும் இல்லங்கள், எந்த உரிமமும் பெறாமல் பணிபுரியும் மகளிரை தங்க வைத்து பணிபுரியும் மகளிா் விடுதியாக செயல்படுவது போன்ற நிகழ்வுகளில் தொடா்புடைய நிா்வாகத்துக்கு ரூ. 50,000 வரை அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com