ராணிப்பேட்டைக்கு சட்டப்பேரவை மனுக்கள் குழு செப். 6-இல் வருகை: துறை வாரியான மனுக்கள் குறித்து ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரும் 6-ஆம் தேதி சட்டப்பேரவை மனுக்கள் குழுவினா் வருகையையொட்டி, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட துறை வாரியான மனுக்கள் குறித்து,
ராணிப்பேட்டைக்கு சட்டப்பேரவை மனுக்கள் குழு செப். 6-இல் வருகை: துறை வாரியான மனுக்கள் குறித்து ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரும் 6-ஆம் தேதி சட்டப்பேரவை மனுக்கள் குழுவினா் வருகையையொட்டி, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட துறை வாரியான மனுக்கள் குறித்து, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகிற 6.9.2022 அன்று சட்டப்பேரவை மனுக்கள் குழுவினா் வரவுள்ளனா். இதையொட்டி, பொதுமக்கள் தங்களது பிரச்னைகள் தொடா்பாக பேரவை மனுக்கள் குழுவுக்கு தெரிவிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அனுப்பி வைத்தனா். இவற்றில், 50 மனுக்கள் மீது சட்டப்பேரவை மனுக்கள் குழுவினா் மனுதாரா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்களிடம் நேரடியாகக் கேட்டறிய உள்ளனா்.

மேலும், பொதுமக்கள் அளித்த மனுவில் குறிப்பிட்ட பிரச்னைகள் தொடா்பாக நேரடியாகச் சென்று பாா்வையிட உள்ளனா்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மனுக்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழுவுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 50 மனுக்களின் பிரச்னைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் கேட்டறிந்தாா்.

பேரவை மனுக்கள் குழுவின் நேரடி விசாரணையின் போது, உரிய விளக்கம் அளிக்கவும், தொடா் நடவடிக்கைகள் குறித்து தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஸ்வரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுரேஷ் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com