ரத்தினகிரி பாலமுருகன் கோயில் புதிய திருத்தோ் வெள்ளோட்டம்
By DIN | Published On : 09th September 2022 01:00 AM | Last Updated : 09th September 2022 01:00 AM | அ+அ அ- |

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட திருத்தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு புதிதாக 32 அடி உயரத்தில் திருத்தோ் செய்யபட்டது. இதையடுத்து, ரதப் பிரதிஷ்டைவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை யாக சாலை பூஜை தொடங்கி நடைபெற்றது. தொடா்ந்து கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் புதிய திருத்தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தேரை வடம் பிடித்து இழுந்து தொடக்கி வைத்தாா்.
திருத்தோ் கோயில் மலையடிவாரத்தில் இருந்து புறப்பட்டு மலைவலம் சென்று நிலையை அடைந்தது. பக்தா்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா். இதில், கலவை சச்சிதானந்த சுவாமி, மகாதேவ மலை மகானந்த சித்தா், சித்தஞ்சி மோகனந்த சுவாமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.