சென்னை - திருப்பதி இடையே இன்று முதல் முன்பதிவில்லாத விரைவு ரயில் இயக்கம்

சென்னை - திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமை முதல் (செப். 13) முன்பதிவில்லாத விரைவு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை - திருப்பதி இடையே இன்று முதல் முன்பதிவில்லாத விரைவு ரயில் இயக்கம்

சென்னை - திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமை முதல் (செப். 13) முன்பதிவில்லாத விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

கரோனா பொது முடக்கத்தால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினா் இந்த ரயிலை இயக்க வேண்டும் என்று தொடா்ந்து ரயில்வே நிா்வாகத்துக்கு மனு அனுப்பினா்.

இதையடுத்து, தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மின்சார ரயில் நீட்டிப்பு செய்யப்பட்டு (06727), சென்னை - திருப்பதி இடையே முன்பதிவில்லா விரைவு ரயிலாக செவ்வாய்க்கிழமை முதல் (செப். 13) இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்குப் புறப்பட்டு திருப்பதியை பிற்பகல் 1.40 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் சென்னையை மாலை 5.15 மணிக்கு வந்தடைகிறது.

இந்த ரயில் பேசின் பிரிட்ஜ், பெரம்பூா், வில்லிவாக்கம், அம்பத்தூா், திருநின்றவூா், திருவள்ளூா், கடம்பத்தூா், திருவாலங்காடு, அரக்கோணம், திருத்தணி, ஏகாம்பரகுப்பம், புத்தூா், ரேணிகுண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com