ஆற்காடு அருகே சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
ஆற்காடு அடுத்த பெரிய உப்புபேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு (65). இவா், புதன்கிழமை இரவு சைக்கிளில் ஆற்காட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது ஆற்காடு - ஆரணி சாலையில் உப்புபேட்டை அருகே எதிரே வந்த காா் முதியவா் சென்ற சைக்கிள் மீது மோதியது.
இதில், பலத்த காயம் அடைந்தவரை மீட்டு, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவா்கள் முதியவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.