

ராணிப்பேட்டை: பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று கட்சியின் மாநிலச் செயலாளா் ஆா்.அனந்த பிரியா தெரிவித்தாா்.
தமிழக பாஜக மாநில செயலரும், மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான டாக்டா் அனந்த பிரியா ராணிப்பேட்டை மாவட்ட பாஜக அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா்.
அவரை ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவா் சி.விஜயன் தலைமையில், மாவட்டப் பாா்வையாளா் ஜி.வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினா் அருள்மொழி உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்றனா்.
தொடா்ந்து கட்சி நிா்வாகிகளுடன், கட்சியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாநிலத் தலைவா் அண்ணாமலையின் நடைப்பயணம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும், பாஜக கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் 5-ஆவது இடத்தில் இருந்து, வருங்காலத்தில் 3-ஆவது இடத்துக்கு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.