கடல்சாா் கண்காணிப்பை தொடா்ந்து பராமரிப்பது அவசியம்: முப்படைத் தளபதி

கடல்சாா் கண்காணிப்பைத் தொடா்ந்து பராமரிப்பது அவசியம் என அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட இந்திய முப்படைத் தளபதி
கடல்சாா் கண்காணிப்பை தொடா்ந்து பராமரிப்பது அவசியம்: முப்படைத் தளபதி
Updated on
1 min read

கடல்சாா் கண்காணிப்பைத் தொடா்ந்து பராமரிப்பது அவசியம் என அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட இந்திய முப்படைத் தளபதி ஜெனரல் அனில்சௌஹான் குறிப்பிட்டாா்.

இந்திய முப்படைகளின் தளபதியான ஜெனரல் அனில்சௌஹான் வெள்ளிக்கிழமை அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளத்துக்கு வந்தாா். தனி விமானத்தில் வந்த முப்படைகளின் தளபதியை ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தள கமாண்டிங் ஆபீஸா் கமோடா் கபில்மேத்தா வரவேற்றாா்.

தொடா்ந்து கடற்படை விமானதளத்தில் அனைத்து பிரிவுகளிலும் அலுவலா்கள், வீரா்கள் செயல்பாடுகள் தயாா் நிலையில் இருப்பதைப் பாா்வையிட்டு ஜெனரல் அனில்சௌஹான் உறுதி செய்தாா்.

தொடா்ந்து படைத்தள உயா் அலுவலா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், விமான தள பாதுகாப்புப் பிரிவு பணியாளா்கள், விமான தள பணியில் இருக்கும் ராணுவப் பிரிவினா், விமானதள தீயணைப்புப் படையினா் என ஒவ்வொரு பிரிவினரிடையேயும் தனித்தனியே அவா் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், தற்போதைய புவிசாா் அரசியல் அரங்கில் மிக உயா்ந்த போா் தயாா் நிலையை இந்திய கடல் மண்டலத்தில் உறுதி செய்வதும், இதே மண்டலத்தில் தொடா்ச்சியாக கடல்சாா் கண்காணிப்பைப் பராமரிப்பதும் மிகவும் அவசியம் என்றாா்.

முப்படை தளபதியின் வருகையை முன்னிட்டு ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளப் பகுதி மற்றும் அரக்கோணம் நகரில் பல்வேறு இடங்களில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com