நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் கே.ராஜசேகர்.
நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் கே.ராஜசேகர்.

நாள்தோறும்  685 லாரிகளுக்கு மணல் ஏற்ற மறுப்பு: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள 13 மணல் குவாரிகளில் நாள்தோறும் 685 லாரிகளுக்கு மணல் லோடு ஏற்றுவதில்லை என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

நாமக்கல்: தமிழகத்தில் உள்ள 13 மணல் குவாரிகளில் நாள்தோறும் 685 லாரிகளுக்கு மணல் லோடு ஏற்றுவதில்லை என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

நாமக்கல்லில் புதன்கிழமை அச்சங்கத்தின் மாநில தலைவர் கே.ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2022 ஏப். 1 முதல் ஒரு யூனிட் மணல் விலை ரூ.1000 என அரசு நிர்ணயம் செய்து, பொதுப்பணித்துறை இணைய வழியில் பொதுமக்களும், லாரி உரிமையாளர்களும் பதிவு செய்து மணலை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தது. 

ஆனால், அரசு மணல் குவாரிகளில் அறிவித்தபடி மக்களுக்கு மணல் விற்பனை செய்யப்படுவதில்லை. அதிக விலைக்கு மணலை கள்ளச் சந்தையில் விற்பனை செய்கின்றனர். நாள்தோறும் ஒரு குவாரியில் 700 லாரிகளுக்கு லோடு ஏற்ற வேண்டிய நிலையில் 15 முதல் 20 லாரிகளுக்கு மட்டுமே லோடு ஏற்றுகின்றனர். இதனால் அதிக விலை கொடுத்து மணலை வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

எனவே, முறைகேடுகளை தடுக்கவும், அரசு நிர்ணயத்த விலைக்கு மணலை விற்பனை செய்யவும் முதல்வர் உத்தரவிட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com