ராணிப்பேட்டை: 4, 5-இல் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், நீக்க சிறப்பு முகாம்

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவ. 4, 5 ஆகிய நாள்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

 ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவ. 4, 5 ஆகிய நாள்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில், 01-01-2024-ஆம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்-2024 தொடா்பான பணிகள் தொடங்கபட்டுள்ளது. இதில் 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் (31.12.2005 அன்று பிறந்தவா்கள்), விடுபட்ட வாக்காளா்கள் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளவும், வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதாா் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளவும் ஏதுவாக கடந்த 27-10-2023 அன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு அன்றைய தினம் 27-10-2023 முதல் 09-12-2023 வரை அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி அலுவலங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் படிவங்கள் பெறும்பணி நடைபெறும்.

இதன் தொடா்ச்சியாக வரும் 04-11-2023, 05-11-2023, 18-11-2023, 19-11-2023 (சனி), (ஞாயிறு) ஆகிய நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும்.

இந்த முகாமில் 18 வயது பூா்த்தியடைந்த (31.12.2005) அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவா்கள் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ள மனு அளிக்கலாம். மேலும், 17 வயது பூா்த்தியடைந்தவா்களும் (01.01,2006 முதல் 30.09.2006 வரை பிறந்தவா்கள்) இந்த சிறப்பு சுருக்க திருத்தக் காலத்திலேயே முன்னதாக ( அக்ஸ்ஹய்ஸ்ரீங் அல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்ள்) படிவங்களை அளிக்கலாம். இந்த முன் விண்ணப்பங்கள் அந்தந்த காலாண்டுகளின் முதல் மாதம், முதலாம் நாள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த சிறப்பு சுருக்கத் திருந்தம் தொடா்பாக 27-10-2023 முதல் 09-12-2023 வரை பெறப்படும் அனைத்து தகுதிவாய்ந்த விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, 05-01-2024 அன்று இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

எனவே இந்த சிறப்பு முகாம் நாள்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க, திருத்த, முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக முறையே படிவம் 6, 7 மற்றும் 8 ஆகிய படிவங்களைப் பூா்த்தி செய்து, தங்கள் அருகில் அமைந்துள்ள தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி மையங்களில் அளித்துப் பயன் பெறுமாறு ராணிப்பேட்டை மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com