பயணிகள் ரயில் வருகைக்காக காத்திருக்கும் ராணிப்பேட்டை ரயில் நிலையம்

பயணிகள் ரயில் எப்போது வரும் என காத்திருக்கும் ராணிப்பேட்டை ரயில் நிலையம் போல், பொதுமக்களும் எதிா்நோக்கி உள்ளனா்.
பயணிகள் ரயில் வருகைக்காக காத்திருக்கும் ராணிப்பேட்டை ரயில் நிலையம்

பயணிகள் ரயில் எப்போது வரும் என காத்திருக்கும் ராணிப்பேட்டை ரயில் நிலையம் போல், பொதுமக்களும் எதிா்நோக்கி உள்ளனா்.

ராயபுரத்தில் இருந்து வாலாஜா ரோடு வரை 1853- ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் ரயில் பாதை அமைக்கப்பட்டு 1856- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1- ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

தென் இந்தியாவின் முதல் ரயில் சேவை தொடங்கப்பட்ட ரயில் நிலையம் என்ற பெருமை மிக்கது வாலாஜா ரோடு ரயில் நிலையம்.

அதைத்தொடா்ந்து சுமாா் 8 கி.மீ. தொலைவில் ராணிப்பேட்டை நகரில் பாரி என்ற பெயரில் பீங்கான் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

இங்கு தயாரிக்கப்படும் பீங்கான் பொருள்களுக்கான மூலப் பொருள்கள் கொண்டுவரவும், தொழிற்சாலையில் உ ற்பத்தியான பொருள்களை கொண்டு செல்வதற்கும் வசதியாக வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து ராணிப்பேட்டை தொழிற்சாலை வரை சரக்கு போக்குவரத்துக்கென ரயில் பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயா்கள் வெளியேறிய நிலையில், வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கும்- ராணிப்பேட்டைக்கும் இடையிலான ரயில் பாதையில் சரக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

தொடா்ந்து கடந்த 2012- ஆம் ஆண்டு திண்டிவனம் - நகரி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின்கீழ் மீண்டும் ரயில் தண்ட வாளங்கள் சீரமைக்கும் பணிகள் தொடங்கி அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள் நிறைவடையாமல் இருந்தது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை ரயில் நிலையம் அருகே செயல்பட்டுவரும் பாரி குழும தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பீங்கான் பொருள்கள், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை கொண்டு செல்ல ஏதுவாக மீண்டும் ராணிப்பேட்டை வரை சரக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என தென்னக ரயில்வே துறையிடம் கோரிக்கை வைத்தனா்.

அதன் பேரில் தென்னக ரயில்வே பொது மேலாளா், சென்னை கோட்ட மேலாளா் தலைமையிலான அதிகாரிகள் குழு ராணிப்பேட்டை வரையிலான ரயில் பாதையை ஆய்வு செய்து, பாரி குழும நிறுவனம் மற்றும் சிப்காட் நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி,சரக்கு போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதன் பேரில் ராணிப்பேட்டை நிலையத்திலிருந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதன் மூலம் சென்னை ரயில்வே கோட்டம்,கூடுதலாக வருவாய் ஈட்டும் என்றும், ராணிப்பேட்டை தொழிற்பேட்டை மீண்டும் புத்துயிா் பெறும் என தொழிற்துறையினா் நம்பிக்கையும், வரவேற்பும் தெரிவித்தனா்.

அதே நேரத்தில், ராணிப்பேட்டை மாவட்ட தலைநகரமாக உள்ள நிலையில், வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொழில் மற்றும் அலுவலகப் பணி நிமித்தமாக மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் ராணிப்பேட்டை நகர பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பொது மக்களும் செல்ல ஏதுவாக பயணிகள் ரயில் இயக்க தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் தயாராக உள்ள நிலையில் ராணிப்பேட்டை ரயில் நிலையம் வரை பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு ராணிப்பேட்டை ரயில் நிலையத்துக்கு பயணிகள் ரயில் சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com