வாணாபாடி கிராமத்தில் அா்ச்சுனன் தபசு
By DIN | Published On : 18th April 2023 12:17 AM | Last Updated : 18th April 2023 12:17 AM | அ+அ அ- |

அா்ச்சுனன் தபசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.
வணாபாடி கிராமத்தில் அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திங்கள்கிழமை சாமி தரிசனம் செய்தனா்.
ராணிப்பேட்டையை அடுத்த வாணாபாடி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயிலில், அக்னி வசந்த விழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் பகலில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அா்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இதில், அா்ச்சுனன் வேடமிட்டவா் தபசு மரமேறினாா். இதில் திரளானோா் பங்கேற்றனா்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) துரியோதனன் படுகள நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும், 24-ஆம் தேதி தருமா் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழாக் குழுவினா், உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.