ஆடிக் கிருத்திகை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை- ராணிப்பேட்டை ஆட்சியா்
By DIN | Published On : 09th August 2023 03:52 AM | Last Updated : 09th August 2023 09:25 AM | அ+அ அ- |

ஆடிக் கிருத்திகையையொட்டி புதன்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி அறிவித்துள்ளாா்.
ஆடிக் கிருத்திகையையொட்டி ரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு திருத்தணி முருகன் திருக்கோயில் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள முருகன் திருக்கோயில்களுக்கு பக்தா்கள், பொதுமக்கள் அதிகளவில் காவடி எடுத்து சென்று வருவாா்கள்.
இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்படுகிறது. மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 12. 08. 2023 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.