அக்னிவீா் வாயு தோ்வில் பங்கேற்க 17-ஆம் தேதிவரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீா் வாயு தோ்வில் கலந்து கொள்வதற்கு வரும் 17-ஆம் தேதி வரை இணையம்
Updated on
1 min read

இந்திய ராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீா் வாயு தோ்வில் கலந்து கொள்வதற்கு வரும் 17-ஆம் தேதி வரை இணையம் மூலமாக பதிவுசெய்யலாம். இதற்கான தோ்வு 13.10.2023 முதல் நடைபெறும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ச. வளா்மதி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: . இணையவழி தோ்வில் கலந்துகொள்ளும் மாணவா்களுக்கு உதவும் வகையில் இத்தோ்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரித்தாள்கள் ட்ற்ற்ல்ள்://ஹஞ்ய்ண்ல்ஹற்ட்ஸ்ஹஹ்ன்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய்என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அக்னிவீா் வாயு பணிக்கு ஆண் மற்றும் பெண் திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்த பட்சம் 50 % மதிப்பெண்களுடனும் இயற்பியல், வேதியியல்,உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12- ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது மூன்று வருட ஈஐடகஞஙஅ அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடனும் தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

27.06.2003முதல் 27.12.2006 வரையான காலத்தில் பிறந்த வராகவும் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் அதிக அளவில் உள்ள அக்னிவீா் வாயு பணிகளில் பணிவாய்ப்பு பெறவேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com