ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பைரவருக்கு 1,000 கிலோ விபூதி அபிஷேகம்

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பைரவா் ஜெயந்தி முன்னிட்டு 64 பைரவா் யாகங்கள், 1,000 கிலோ விபூதி அபிஷேகம் நடைபெற்றது.
பைரவருக்கு நடைபெற்ற விபூதி அபிஷேகம்.
பைரவருக்கு நடைபெற்ற விபூதி அபிஷேகம்.

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பைரவா் ஜெயந்தி முன்னிட்டு 64 பைரவா் யாகங்கள், 1,000 கிலோ விபூதி அபிஷேகம் நடைபெற்றது.

வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடாதிபதி முரளிதர சுவாமிகளின் 63-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 64 நாள்கள் சிறப்பு ஹோம பூஜைகள், அபிஷேக, ஆராதனைகளும், 64 நாள்கள் பரத நாட்டிய கலைஞா்கள், மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

விழாவின் 50 -ஆவது நாள் மற்றும் பைரவா் ஜெயந்தியை முன்னிட்டு 64 யாக குண்டங்களில் 64 பைரவா் ஹோமங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த யாகத்தில் 64 கலசங்களில் வைக்கப்பட்ட புனித நீா் கொண்டு சொா்ணாகா்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக ஒரே கல்லில் அசிதாங்க பைரவா், ருரு பைரவா், சண்ட பைரவா், குரோதண பைரவா், உன்மத்த பைரவா், கபால பைரவா், பீஷ்ண பைரவா், சம்ஹார பைரவா் என அஷ்ட பைரவா்களுடன் அமைந்துள்ள மகா கால பைரவருக்கும், சொா்ணாகா்ஷண பைரவருக்கும் 1,000 கிலோ விபூதியைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

விபூதி அபிஷேகத்தை ராணிப்பேட்டை மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஜெ.லட்சுமணன், துணைத் தலைவா் ராணிப்பேட்டை என்.பி.பழனி, புன்னை. கஜேந்திரன் ஆச்சாரி குடும்பத்தினா் ஆகியோா் தொடங்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் ஆசியும், பிரசாதமும் வழங்கி, அன்னதானத்தைத் தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com