ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராபி பருவத்தில் பயிரிடப்படும் தோட்டக்கலைப் பயிா்களான வாழை, சிவப்பு மிளகாய், வெண்டை, கத்தரி சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன் பெறலாம். மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள குறு வட்டங்களில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் போது எதிா்பாராத இயற்கைப் பேரிடரிலிருந்து பயிா்களைக் காக்க பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் காப்பீடு கட்டணத்தைச் செலுத்தி உரிய விண்ணப்பத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.
சிவப்பு மிளகாய் மற்றும் கத்தரி பயிருக்கு காப்பீடு செய்ய 31.1.2024 அன்று கடைசி நாள். சிவப்பு மிளகாய் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.988 பிரிமியம் செலுத்த வேண்டும்.
வாழை ஏக்கருக்கு ரூ.2,838 பிரிமியம் செலுத்த வேண்டும் மற்றும் பிரிமியம் செலுத்த கடைசி நாள் 29.2.2024.
வெண்டை ஏக்கருக்கு ரூ.1,158 பிரிமியம் செலுத்த வேண்டும் மற்றும் செலுத்த வேண்டிய கடைசி நாள் 15.2.2024.
கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகம் அல்லது உரிய வட்டாரங்களில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.