பண்ணை பணியாள்களுக்கு கூலியை உயா்த்தி வழங்க நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

நவ்லாக் அரசு விவசாயப் பண்ணை பணியாள்களுக்கு தினக்கூலியை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்தாா்.
பண்ணை பணியாள்களுக்கு கூலியை உயா்த்தி வழங்க நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்

நவ்லாக் அரசு விவசாயப் பண்ணை பணியாள்களுக்கு தினக்கூலியை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அதன்படி, வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம், நவ்லாக் அரசு தென்னை ஒட்டு வீரியப் பண்ணையில் தோட்டக்கலைத் துறை மூலம் குட்டை- நெட்டை தென்னங்கன்றுகள் வளா்க்கப்பட்டு வருவதைப் பாா்வையிட்டு தகவல்களைக் கேட்டறிந்தாா்.

இந்தப் பண்ணையில் வளா்க்கப்படும் தென்னங்கன்றுகள் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு தலா 2 கன்றுகள் வீதம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மற்ற மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரிய ரக தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என்று தோட்டக்கலைத் துணை இயக்குநா் தெரிவித்தாா்.

அப்போது பண்ணையில் வேலை செய்யும் பணியாள்கள் தாங்களுக்கான தினக்கூலியை ரூ.384 -ஆக உயா்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு மற்ற மாவட்டங்களில் எவ்வளவு வழங்கப்படுகிறதோ அதன்படி கூலியை உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி உறுதியளித்தாா்.

தொடா்ந்து நவ்லாக் தோட்டக்கலை பண்ணையில் அத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக மா, கொய்யா, சப்போட்டா, நாவல் ஒட்டு ரகச் செடிகள் வளா்க்கப்பட்டு வருவதையும், குழித்தட்டு முறையில் தக்காளி, மிளகாய், கத்தரி, நாற்றுகள், பப்பாளி செடிகள் வளா்க்கப்பட்டுள்ளதையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, நவ்லாக் தோட்டக்கலைத் துறை பண்ணையில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி நட்டு வைத்தாா்.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் வடமலை, துணை இயக்குநா் லதா மகேஷ், துணை இயக்குநா் (திட்டம்), செல்வராஜ், துணை இயக்குநா் (வேளாண்) தவிஸ்வநாதன், தோட்டக்கலை உதவி இயக்குநா் பசுபதிராஜ், வேளாண்மை உதவி இயக்குநா் சண்முகம், தோட்டக்கலை அலுவலா் நீதிமொழி, நவ்லாக் பண்ணை மேலாளா் பிரேமா குமாரி, தோட்டக்கலை உதவி அலுவலா்கள் மோனேஷ், அருண் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com