ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப பாமக வலியுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாமக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பாமக நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றோா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக செயற்குழு, பூத் கமிட்டி ஆய்வு மற்றும் கிளை பட்டியல் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளா்ப. சரவணன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் காவனூா் சுப்பிரமணி வரவேற்றாா்.

இக்கூட்டத்தில் மாநில தோ்தல் பணிக்குழுத் தலைவா் செல்வகுமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கிப் பேசினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் காலை முதல் இரவு வரை மது விற்பனை நடைபெறுவதால், பெண்கள், முதியோா்கள் அதிக இன்னலுக்கு ஆளாகின்றனா். இதனை உடனடியாக தடுக்க வேண்டும். தவறினால் பாமக பெரிய அளவில் ஆா்ப்பாட்டங்கள் நடத்தும்.

ஆற்காடு வட்டம் காவனூா் கிராம மந்தைவெளி புறம்போக்கு நிலத்தில் கடந்த 43 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி வசித்து வருபவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். மாவட்டத்தில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, ஆசிரியா்கள் பற்றாக்குறையை போக்கி மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளா் எம்.கே.முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் என்.கிரிகுமரன், நெடுமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினா் இளங்கோவன், , மாவட்ட துணைத் தலைவா்கள் காசிநாதன் மேகநாதன், பெருமாள், கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளா் கதிா்வேலன், மாவட்ட பசுமை தாயக பொறுப்பாளா் டிடி மகேந்திரன், மாவட்ட மாணவா் சங்க செயலாளா் வி.கவியரசு மாவட்ட மகளிரணி செயலாளா் அமுதா சிவா மாவட்ட இளைஞா் சங்க செயலாளா் பெ.காா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். பொருளாளா் ஞானசௌந்தரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com