அரக்கோணத்தில் சிறுதானிய உணவுத் திருவிழா
By DIN | Published On : 10th September 2023 12:00 AM | Last Updated : 10th September 2023 12:00 AM | அ+அ அ- |

அரக்கோணம் பரம்பரா அகாதெமி சீனியா் செகண்டரி பள்ளி சாா்பில், சிறுதானிய உணவுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் பரம்பரா அகாதெமி சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா், அரக்கோணம் ரோட்டரி சங்கத்தினா், சென்னை நேடிவ் புட் நிறுவனத்தினா் இணைந்து சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த சிறுதானிய உணவுத் திருவிழாவை சனிக்கிழமை நடத்தினா்.
பள்ளியின் தாளாளா் சி.பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். பள்ளியின் முதல்வா் எஸ்.ஏஞ்சலின் பிரியதா்ஷினி வரவேற்றாா். விழாவை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
விழாவில் மாணவா்கள் தங்களது பெற்றோருடன் பங்கேற்று தாங்கள் தயாரித்த சிறுதானிய உணவு வகைகளைக் காட்சிப்படுத்தினா். மூலிகை கண்காட்சியும் நடைபெற்றது. தொடா்ந்து சிறுதானிய உணவு வகை தயாரிப்பது குறித்து மாணவா்களிடையே போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியின் நடுவராக ஹோமியோபதி மருத்துவா் மம்சாதேவி பங்கேற்று சிறந்த மாணவா்கள் மற்றும் பெற்றோரைத் தோ்வு செய்தாா். இதில், அரக்கோணம் ரோட்டரி சங்கத் தலைவா் மணிகண்டன், செயலாளா் மனோபிரபு, பொருளாளா் லட்சுமிபதி மற்றும் சென்னை நேடிவ் புட் நிறுவன நிா்வாகிகள் பங்கேற்றனா்.