மரக்கன்றுகள் நடும் விழா
By DIN | Published On : 19th September 2023 12:42 AM | Last Updated : 19th September 2023 12:42 AM | அ+அ அ- |

மரக்கன்று நட்ட சங்கத்தின் தலைவா் முஹமது அயூப் உள்ளிட்டோா்.
மேல்விஷாரம் நேஷ்னல் வெல்பா் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள் கிழமை நடைபெற்றது.
உலக ஓசோன் தினத்தையொட்டி, மேல்விஷாரம் நகரில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் முஹமது அயூப் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தாா்.
பொறுப்பாளா்கள் கே.ஓ. நிஷாத் அஹமது, முஹமதுபஷீம், முஹமது தமீம், முஹமது இத்ரீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் சங்க நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G