

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகா் சதுா்த்தி விழா, கால சக்கர பூஜையுடன் திங்கள்கிழமை நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,விநாயகா் சதுா்த்தி விழா பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தலைமையில், 27 நட்சத்திரங்களுக்கு,12 ராசிகளுக்கு ,9 நவக்கிரகங்களுக்கு என மொத்தம் 48 மண்டலங்களுக்கும் விருட்சங்கள் அமைத்து காலச்சக்கரம் என்ற பெயரில் அமைந்துள்ள செடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து அஷ்டதிரவியங்கள் மற்றும் விளாம்பழம்,மோதகம், அப்பம்,சக்கரைப் பொங்கல், சுண்டல் போன்ற விநாயகருக்கு பிடித்த விசேஷப்பொருள்களுடன் அருகம்புல், கரும்பு, வெள்ளெருக்கம் வோ் மற்றும் பல வகையான அற்புத மூலிகைகளைக் கொண்டு மஹா கணபதி ஹோமமும் தன்வந்திரி ஹோமமும் நடைபெற்றது.
இதனை தொடா்ந்து ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு நல்லெண்ணெய், சீயக்காய் தூள், கதம்பப்பொடி, பால், தயிா், கரும்பு சாறு, பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், விபூதி, பஞ்சாமிா்தம் போன்ற 12 விதமான அபிஷேக திரவியங்களைக்காண்டு சிறப்பு அபிஷேகமும் பிராா்த்தனையும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.