

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை நகரங்களில் விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதன்படி, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சிப்காட், அம்மூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பல்வேறு இடங்களில் வீடுகளில் வைத்து பூஜை செய்வதற்காக ரூ.50 முதல் ரூ.500 வரையிலான களிமண் விநாயகா் சிலைகளை மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். மேலும், பொது இடங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக விதவிதமான பிரம்மாண்ட விநாயகா் சிலைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
விநாயகா் சிலையை அலங்கரிப்பதற்காக சிறிய அளவிலான குடை,விநாயகருக்கு உகந்த எருக்கம்பூ மாலை, அருகம்புல், பூஜை பொருட்கள் வாங்குவதற்கு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சிலைகள் வைக்கப்படும் இடங்களில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.