சென்னையில் இருந்து  வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த வந்தே மெட்ரோ சோதனை ரயில்.
சென்னையில் இருந்து  வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த வந்தே மெட்ரோ சோதனை ரயில்.

வந்தே மெட்ரோ சோதனை ஓட்ட ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தம்: காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் ஏமாற்றம்...

வந்தே மெட்ரோ சோதனை ஓட்ட ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால், காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
Published on

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி வரை சோதனை ஓட்ட ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில், வந்தே மெட்ரோ சோதனை ஓட்ட ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால், காட்பாடி ரயில் நிலையத்தில் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் சென்னை கடற்கரையில் இருந்து காட்பாடி வரை நடைபெறும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

அதன்படி வில்லிவாக்கத்தில் இருந்து சனிக்கிழமை காலை 8 .15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9 மணிக்கு சென்று சேரும். அங்கு அரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு காலை 9.30 மணிக்கு புறப்பட்டு வில்லிவாக்கத்துக்கு காலை 10:15 மணிக்கு வந்து சேரும் அங்கிருந்து 10 15 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு 11. 5 மணிக்கு காட்பாடிக்கு 11.55 மணிக்கு சென்று சேரும் காட்பாடியில் இருந்து பகல் 12. 15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு மதியம் 2 மணிக்கு சென்று சேரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வந்தே மெட்ரோ ரயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் அனைத்தும் குளிா்சாதன மயமாக்கப்பட்ட பெட்டிகள் விரைவு ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே அறிவித்தது போன்று அரக்கோணத்தில் காலை 11. 10 மணிக்கு கடந்து சென்றது. அதே நேரம் சோதனை ஓட்ட ரயில் என்பதால் அரக்கோணத்தில் இந்த ரயில் நிற்கும் பெட்டிகள் வடிவமைப்பு மற்றும் இருக்கைகள் எப்படி இருக்கிறது என்று பாா்க்கலாம் என்று சில பயணிகள் ஆசையுடன் அரக்கோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்தனா். ஆனால் ரயில் அங்கு நிற்காமல் சென்றது. ரயில் காட்பாடிக்கு வந்து சேரும் என்று எதிா்பாா்த்து இருந்த அதிகாரிகள் மற்றும் பயணிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த வந்தே மெட்ரோ ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கு பகல் 12. 25 மணிக்கு வந்து சோ்ந்தது. இது குறித்து வாலாஜா ரோடு ரயில் நிலைய மேலாளரிடம் கேட்ட போது, அரக்கோணத்தில் இருந்து வாலாஜா வரை வந்தே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் என்பதால் மெதுவாக வந்தது. இந்த ரயில் மதியம் 2 மணிக்குள் சென்னை கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்பதால் வாலாஜாவில் இருந்து மீண்டும் சென்னைக்கு செல்கிறது காட்பாடிக்கு செல்லவில்லை என்றாா்.

இந்த ரயிலில் அதிகாரிகள் பயணம் செய்து தண்டவாளங்கள் போதிய உறுதித் தன்மையுடன் உள்ளதா என்று சோதனை செய்தனா். சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணத்துக்கு குறித்த நேரத்துக்கு வந்த வந்தே மெட்ரோ ரயில் அரக்கோணத்தில் இருந்து வாலாஜா ரோடு ரயில் நிலையத்துக்கு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மெதுவாக இயக்கப்பட்டு தண்டவாளத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யப்பட்டதால், காட்பாடி ரயில் நிலையம் வரை இயக்க போதிய நேரம் இல்லாததால், வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு திருப்பப்பட்டதால், காட்பாடி ரயில் நிலையத்தில் அதிகாரிகள், ரயில் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

Dinamani
www.dinamani.com