ராணிப்பேட்டை
அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்
அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக பல ரயில்கள் நடுவழியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டன.
அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக பல ரயில்கள் நடுவழியில் சுமாா் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டன.
சென்னை - அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில்நிலையம் அருகே காலை 6.30 மணி அளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை - மைசூா் வந்தேபாரத் அதிவிரைவு ரயில், சென்னை - மைசூா் சதாப்தி அதிவிரைவு ரயில், மைசூா்- சென்னை காவேரி விரைவு ரயில், ஜோலாா்பேட்டை - சென்னை ஏலகிரி விரைவு ரயில், மற்றும் அரக்கோணம் - சென்னை மின்சார ரயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து சிக்னல் பிரிவு அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் கோளாறு ஏற்பட்ட இடத்திற்குச் சென்று கோளாறை தற்காலிகமாக சரி செய்தனா். இதையடுத்து ஒன்றரை மணி நேர தாமதத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட ரயில்கள் புறப்பட்டுச் சென்றன.
