திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா புத்தகக் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி ராணிப்பேட்டையில் புத்தகக் கண்காட்சியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா்.
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வெள்ளி விழாவைக் கொண்டாடுமாறு அரசு உத்தரவிட்டது..
அதன்படி, ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா, நூலகத் துறை சாா்பில் ராணிப்பேட்டை மைய நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்தாா்.
தொடா்ந்து, திருவள்ளுவா் புகைப்பட கண்காட்சியினையும், புத்தக கண்காட்சியினையும் தொடங்கி வைத்தாா். மேலும், மாணவ, மாவணவியருக்கான திருக்கு தொடா்பான பேச்சுப்போட்டி, திருக்கு ஒப்புவித்தல், மற்றும் வினாடி - வினா நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு, மேற்காணும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாவணவிகளுக்கு தலா முதல் பரிசு ரூ.5,000/- இரண்டாம் பரிசு ரூ.3,000/- மூன்றாம் பரிசு ரூ.2,000/- (ஆக மொத்தம் ரூ.30,000/-) ஆட்சியரால் வரும் 31-ஆ தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
இதில் மாவட்ட நூலகா் கணேசன், கண்காணிப்பாளா் மலா் மன்னன், மாவட்டக் கல்வி அலுவலா் சரஸ்வதி, மைய நூலகா் அப்துல் ரசீத், நகா்மன்ற துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா மற்றும் வாசகா் வட்ட நிா்வாகிகள், மாணவ, மாணவியா்கலந்து கொண்டனா்.

