சிறப்பு அலங்காரத்தில் பாலகணபதி ஆஞ்சனேயா்.
ராணிப்பேட்டை
ஆற்காடு ஸ்ரீ பாலகணபதி ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆற்காடு இளங்குப்பன் தெருவில் உள்ள ஸ்ரீபாலகணபதி அஞ்சனேயருக்கு திங்கள்கிழமை காலை c,
ஆற்காடு: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆற்காடு இளங்குப்பன் தெருவில் உள்ள ஸ்ரீபாலகணபதி அஞ்சனேயருக்கு திங்கள்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பஜனைபாடல்களுடன் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
அதேபோல், ஆற்காடு தோப்புகானா, கண்ணமங்கலம் சாலை, முப்பதுவெட்டி கீரைகார தெரு, கலவை சாலை, வேலூா் சாலை மாசாப்பேட்டை, பாலாற்றங்கரை உள்ளிட்ட பல இடங்களில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடபட்டது. பக்தா்கள் தங்கள் வேண்டுதலுடன் சாமி தரிசம் செய்தனா்.

