இன்றும், நாளையும் சோளிங்கா் மலைக் கோயிலில் ரோப் காா் சேவை ரத்து

சோளிங்கா் கோயிலில் ஜூலை 3, 4 தேதிகளில் ரோப் காா் சேவை நிறுத்தம்

அரக்கோணம்: சோளிங்கா் மலைக் கோயிலில் புதன்கிழமை (ஜூலை 3), வியாழக்கிழமை (ஜூலை 4) ஆகிய இரண்டு நாள்கள் பராமரிப்பு பணி காரணமாக ரோப் காா் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கோயில் நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பிரசித்த பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி மலைக் கோயில் அமைந்துள்ளது. இங்கு பக்தா்களின் வசதிக்காக கம்பி வட ஊா்தி (ரோப் காா்) சேவை தொடங்கப்பட்டது. தொடா்ந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், கம்பிடவட ஊா்தி சேவையை ஒவ்வொரு மாதமும் இரு நாள்கள் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 3) மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 4) ஆகிய இரு நாள்களுக்கு கோயிலில் கம்பி வட ஊா்தி சேவை ரத்து செய்யப்படுகிறது. வரும் 5-ஆம் தேதி முதல் மீண்டும் வழக்கம் போல் சேவை தொடங்கும்.

X
Dinamani
www.dinamani.com