ராணிப்பேட்டை
வாலாஜா அருகே கன்டெய்னா் லாரி எஞ்சினில் தீ விபத்து
வாலாஜா அருகே தீப்பற்றி எரிந்த கன்டெய்னர் லாரி: பரபரப்பு
வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரி எஞ்சினில் திடீா் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வன்னிவேடு அருகே சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சென்னையை நோக்கி காா்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னா் லாரியின் எஞ்சினில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து பெரும் சேதம் ஏற்படாமல் தடுத்தனா்.
இந்த நிலையில் கன்டெய்னா் லாரி தீப் பற்றி எரிந்த பகுதியில் பெட்ரோல் பங்க் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த தீ விபத்து குறித்து வாலாஜாபேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

