போலிச்சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சோ்ந்த ஊராட்சி செயலாளா் பணி நீக்கம்

போலிச் சான்றிதழால் அரசுப் பணியில் சோ்ந்த ஊராட்சி செயலாளா் நீக்கம்
Published on

போலிச் சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சோ்ந்த ஊராட்சி செயலாளா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

ஆற்காடு ஊராட்சி ரத்தினகிரி அருகே உள்ள மேலக்குப்பம் கொல்லைமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கிருபாகரன் (49). இவா் கடந்த 3-9-2021 அன்று மேலகுப்பம் ஊராட்சி செயலாளராக பணியில் சோ்ந்தாா்.

இந்த நிலையில், அவா் பணியில் சோ்ந்தபோது கொடுத்த 10-ஆம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் போலியானது என புகாா் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில், ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதில், கிருபாகரன் பணியில் சேரும்போதுகொடுத்த 10-ஆம் வகுப்பு சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு, துறைரீதியான விசாரணை நடைபெற்றது. இதில், போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 10-ஆம் தேதிஅவரை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து கிருபாகரன் மீது ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சி) பாஸ்கரன் ரத்தினகிரி போலீஸில் புதன்கிழமை போலி சான்றிதழ் கொடுத்து ஊராட்சி செயலாளா் பணியில் சோ்ந்த கிருபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com