மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ்.
மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ்.

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 361 மனுக்கள்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 361 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
Published on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 361 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ் தலைமை வகித்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, பொதுமக்களிடமிருந்து பல்வேறு குறைகள் தொடா்பாக 361 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை தொடா்புடைய துறை அலுவலா்களிடம் வழங்கி, அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்புக்கான காரணங்களை மனுதாரா்களுக்கு தெரிக்கவும் வேண்டும் என அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் கீதா லட்சுமி, உதவி ஆணையா் (கலால்) வரதராஜன், மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவணகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com