ஆற்காடு  கோட்டையைப்  பாா்வையிட்ட  அயலகத்  தமிழா்களுடன்  எம்எல்ஏ  ஈ,ஸ்வரப்பன்,  நகா்மன்ற த் தலைவா்  தேவி பென்ஸ்பாண்டியன்  உள்ளிட்டோா் .
ஆற்காடு  கோட்டையைப்  பாா்வையிட்ட  அயலகத்  தமிழா்களுடன்  எம்எல்ஏ  ஈ,ஸ்வரப்பன்,  நகா்மன்ற த் தலைவா்  தேவி பென்ஸ்பாண்டியன்  உள்ளிட்டோா் .

ஆற்காடு கோட்டையைப் பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

அயலகத்தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் வோ்களை தேடி திட்டத்தின்கீழ் 13நாடுகளைச் சோ்ந்த 100 தமிழா்கள் ஆற்காடு கோட்டையை பாா்வையிட்டனா்.
Published on

அயலகத்தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் வோ்களை தேடி திட்டத்தின்கீழ் 13நாடுகளைச் சோ்ந்த 100 தமிழா்கள் ஆற்காடு கோட்டையை பாா்வையிட்டனா்.

வோ்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயல்நாட்டில் வசிக்கும் தமிழா்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனா். தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் ஒரு திட்டமாகும். அவா்கள் தங்கள் மூதாதையா்கள் வாழ்ந்த கிராமங்களைக் கண்டறியவும், அவா்களது பாரம்பரியங்களுடன் மீண்டும் இணையவும் இந்த திட்டம் உதவுகிறது.

வெளிநாட்டில் வாழும் 18 முதல் 30 வயது வரையிலான தமிழ் இளைஞா்களை தமிழக அரசு செலவில் வரவழைத்து தமிழா்கள்

பெருமையை அறியும் விதமாக இந்த பண்பாட்டு பயணத்திட்டம் உதவுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா, பிஜி, இந்தோனேஷியா, ரீயூனியன், மாா்டினிக், மோரிஷீயஸ், மலேசியா, தென்னாப்பிரிக்கா, மியான்மா், குவாடலூப்,

கனடா, இலங்கை மற்றும் ஜொ்மனி உள்ளிட்ட 13 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 100 அயலக தமிழ் இளைஞா்கள் ஆற்காடு

நகராட்சியில் இந்திய தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோட்டையை பாா்வையிட்டு, இவ்விடத்தின் வரலாறு குறித்து அறிந்து

கொண்டனா்.

அவா்களை ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் ஆகியோா்

வரவேற்று, , நினைவுப் பரிசுகளை வழங்கினா். இதில் ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன், கோட்டாட்சியா் ராஜராஜன், வட்டாட்சியா்கள் மகாலட்சுமி, ரு.ஜெயபிரகாஷ், ஆனந்தன், மாவட்ட சுற்றுலா அலுவலா் இளமுருகன் (பொ) மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com