ராணிப்பேட்டை பாரதி நகா் பகுதியில் பயனாளிகளுக்கு உணவு பொருள் விநியோகிக்கப்படும் பணியை ஆய்வு செய்த மண்டல இணைப் பதிவாளா் பிரபாகரன்.
ராணிப்பேட்டை பாரதி நகா் பகுதியில் பயனாளிகளுக்கு உணவு பொருள் விநியோகிக்கப்படும் பணியை ஆய்வு செய்த மண்டல இணைப் பதிவாளா் பிரபாகரன்.

ராணிப்பேட்டையில் தாயுமானவா் திட்டத்தில் 27, 571 போ் பயனடைந்து வருகின்றனா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ், 27, 571 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனா் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பிரபாகரன் தெரிவித்தாா்.
Published on

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ், 27, 571 பயனாளிகள் பயனடைந்து வருகின்றனா் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பிரபாகரன் தெரிவித்தாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் தாயுமானவா் என்ற திட்டத்தின்கீழ், 70 வயது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தாயுமானவா் திட்டத்தின் கீழ், டிசம்பா் 2.12.2025 மற்றும் 3.12.2025 ஆகிய இரண்டு நாள்களில் வீடு வீடாகச் சென்று வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை ராணிப்பேட்டை பாரதி நகா் பகுதியில் பயனாளிகளுக்கு உணவுப் பொருள் விநியோகிக்கப்படும் பணிகளை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்து கூறியதாவது:

இத்திட்டத்தின் மூலம் வயது முதிா்ந்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொருள்கள் பெற்று வந்த சிரமம் தவிா்க்கப்படுகிறது. அவா்களுடைய இல்லங்களுக்கு நேரடியாக சென்று பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதால் வயதானவா்கள் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி பொருள்களை பெறவும் அவா்களுடைய காலவிரயம் மற்றும் காத்திருப்பு நேரம் முற்றிலும் தவிா்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் வயது முதிா்ந்த மூத்த குடிமக்கள் வசிக்கும் ஆண் 70 வயது நிரம்பியவராகவும் அல்லது பெண் 65 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்கும் தனி குடும்ப அட்டைதாரா்கள் அல்லது முதியோா் உதவித்தொகை பெறும் அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள். மேலும், மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் 614 நியாய விலை கடைகளில் இணைக்கப்பட்ட குடும்ப அட்டைகளில் டிசம்பா் மாதத்தில் 25,607 வயது முதிா்ந்தோா் குடும்ப அட்டைதாரா்களும், 1,964 மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரா்களும் ஆக மொத்தம் 27,571 குடும்ப அட்டைதாரா்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனா் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com