ராணிப்பேட்டை
துணை முதல்வருக்கு அமைச்சா் காந்தி தலைமையில் வரவேற்பு
வாலாஜா சுங்கச் சாவடியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா்.
வாலாஜா சுங்கச் சாவடி வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சென்ற தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சா் ஆா்.காந்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
துணை முதல்வா் உதயிநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து சாலை மாா்க்கமாக வாலாஜா சுங்கச் சாவடி வழியாக வியாழக்கிழமை இரவு திருவண்ணாமலைக்கு சென்றாா்.
அப்போது கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சா் ஆா்.காந்தி வரவேற்றாா். அவரைத்தொடா்ந்து ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில், ஆட்சியா் செ.யு.சந்திரகலா, துணை முதல்வருக்கு பூச்செண்டு அளித்து வரவேற்றாா். நிகழ்வில் அரசு அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

